பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தேசிய இலக்கியம் இவ்வடியார்கள் நினைந்ததாகவே தெரியவில்லை. இத் தகைய கும்பிடும் பணிக்கு எத்தகைய இடர்ப்பாடேனும் எப்பொழுதாவது தோன்றினால் அவ்வீடரைக் களைய அவர் கள் தயங்கினதே இல்லை. இடர் எப் பக்கத்தில் தோன்றி தும், யாரால் தோன்றினும், அதனைப்பற்றிக் கவலை இல்லை. சண்டேசுவரர் வரலாறு இக் கருத்தை நன்கு வலியுறுத்தல் காணலாம். தம்முடைய வணக்கத்திற்கு இடையூறு விளைவித்தவர் பெற்ற தந்தையாகவே இருப்பினும் சிறிதும் வருந்தாமல், தந்தையார் காலைத் துண்டித்தவர் சண்டேசுரர் அல்லரோ? இங்குக் கூறிய வழியையும் பயனையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த அடியார்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல்லுழிக் காலமாக இருப்பினும், அவர்கள் வாழ்க்கையை நன்கு ஆய்ந்து, அதன் தத்துவத்தை வகைப்படுத்திக் கூறிய பெருமை சேக்கிழாருக்கு உரியது. அடியார்கள் யார் என்ற வினாவிற்குரிய விடையை ஐயத்திற்கு இடமின்றித் தந்த பெரியார் அவரேயாவார். அடியார்களைப்பற்றிச் சேக்கிழார் கூறும் பல பாடல்களில் இரண்டு நோக்கற்பாலன. கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்மொனும் ஒக்கவே கோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்." "ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்றிலார் ஈர அன்பினர் பாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ?" . (பெ. பு-திருக்கூட்டச் சிறப்பு. 8, 9,) *: (வறுமை, செல்வம் என்ற இரட்டை நோய்களிலிருந்து விடுபட்ட மன நிறைவை உடையவர்கள், மண் ஒடு செம்பொன் இரண்டையும் ஒன்றாக மதிப்பவர்; நாளும் வளரும் அன்புடன் இறைவனைக் கும்பிடுவது தவிர மோட்சத்தை