பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்ப்ந்தன் 75 யும் விரும்பாத மன உறுதி படைத்தவர். அவர்கள் ஆபரணம் உருத்திராக்கமே உடை கந்தைத்துணியே இறைவன் பணியையே பணியாக் கொள்வர்: உயிர்களிடத்து நிறைந்த அன்புடையார்; அவர்கள் வீரத்தைப் பற்றி என்னால் அளவிட்டுக் கூற முடியுமா?) இவ்விரண்டு பாடல்களும் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. ஒட்டையும் செம்பொன்னையும் வேறுபாடு காணாமல் அவர் கள் பார்க்கின்றனர். காரணம் என்ன? இந்த மனநிலை ஒத்தகையது? இதனைப் பெறுதல் எளிதல்லவே? ஒருவேளை செல்வத்தை மதியாதிருந்தாலும் வேறு சிலவற்றிலாவது பற்று இருக்கத்தானே வேண்டும்? உல்கச் செல்வம் அழிவது ஒன்று கருதி அதன்பால் நாட்டம் ஒழிந்து, அழியாதவிட்டுச் சல்வத்தை விரும்பி நிற்பவர்களான பலரைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். அத்தகையாளர்களா இவர்கள்? இல்லை என்கிறார் சேக்கிழார். வீட்டின்பத்தையும் இவர்கள் விரும்ப வில்லையாம் விடும் வேண்டா விறல் அல்லது வன்மை 'உடையவர்களாம். ஏன் இவர்கள் வீட்டையும் விரும்ப வில்லை? காரணம் இரு வகைப்படும். கும்பிடுதலாகிய வழியைத் தவிர வீடு என்ற பயனை இவர்கள் விரும்பவில்லை. மற்றொரு காரணம், வீட்டை விரும்புவதும் ஒருவகைப்பற்று தானே? வீடு வேண்டும் என்றால்கூட அதுவும் ஒரு வகை ஆசைதானே? ஆசையின் மூலம் சிறப்புடையதாயினும் ஆசை ஆசைதானே? ஆசையுடையார் அடியார் ஆதல் எங்ங்ணம்? திருமூலர் வாக்கு இங்கு நினைவில் இருக்க வேண்டிய ஒன்று. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின் கள், ஈசனோடு ஆயினும் ஆ ைச அறுமின்கள்: இதனால்ேயே போலும் அடியார்கள் வீட்டையும் விரும்ப வில்லை. அவ்வாறானால் இயற் ைக யி ன் இகந்த (abnormal) மனநிலையை உடையவர்களா இவ்வடியார்கள்? அப்படியானால், ஏனையோரால் போற்றவும் பின்பற்றவும் தகுதியற்றவ்ர்கள். இதற்கும் சேக்கிழார் விடை கூறுவார் iோல்,"சர அன்பினர் யாதும் குறைவிலார்" என்கிறார். ஈர