பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 என்றால் அதற்குரிய காரணம் எதுவாகும் என்று ஆராய வேண்டியுள்ளது.

மிக நீண்ட முறையில் சிந்தித்து ஆராய்வதற்குரிய ஒரு கருத்தாயினும் சுருங்கிய அளவில் இதனைப் பற்றி ஒன்று இரண்டு சொல்லலாம். கிரேக்க நாகரிகங்கள் போன்றவை இன்று இல்லாமல் போனதற்கு அடிப்படையான காரணம், அந் நாட்டு இலக்கியங்களும் அறிஞர் கண்ட காட்சிகளும் மக்கள் வாழ்வோடு ஒட்டியதாக அமையவில்லை. வேறு வகையாகக் கூற வேண்டுமேயானால், பிளேட்டோ? போன்ற அறிஞர்கள் "city state போன்ற நூல்களையும், அரிஸ்டாட்டில் போன்றவர்கள் பாட்டு இயல் (poetics) போன்ற நூல்களையும் எழுதிய காலத்தில், அவ்வெழுத்துக்கள் மக்கள் வாழ்வோடு தொடர்பு அற்றவையாயிருந்தன. மாபெரும் படைப்புகளான இந்நூல்கள் எத்துணைச் சிறந்தவையாக இருப்பினும் இந்த நூல்கள் பேசும் நாகரிகத்தைக் கொண்டு செலுத்த வேண்டிய மக்கள் இல்லாமல் போய்விட்டனர். இன்னும் விளக்கமாக இதனைச் சொல்ல வேண்டுமானால், பிளேட்டோ நூல்கள் எழுதிய அதே நேரத்தில் கிரேக்கப் பொது மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? பசித்த சிங்கத்தினிடம் கணவன்மார்களைத் தூக்கி எறிந்து அச் சிங்கங்கள் அவ் அப்பாவி மனிதர்களைக் கிழித்துத் தின்பதை அவர்கள் மனைவிமார்களைப் பார்க்கு மாறு செய்தார்கள். பிளேட்டோவின் மாபெரும் தத்து வங்கள் எங்கே? கணவனைச் சிங்கத்திடம் தூக்கி எறிந்து அவன் மனைவியை வேடிக்கை பார்க்குமாறு சொல்லுகின்ற பொதுமக்கள் வாழ்வு எங்கே? அதே போன்றுதான் காரியலேனஸ் போன்ற வீரர்கள் பிறந்த ரோமாபுரியில் பெண்கள் முத்துக்களைத் திராட்சை மதுவில் கரைத்துக்