பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 77 (Ends and Means) என்ற நூலில் பக்தி மார்க்கத்தை ஞான மார்க்கத்தினும் தாழ்ந்தது என்று கூறுகிறார். மேலே கூறிய அன்பு வழிக்கும், பக்தியின் பெயரால் பிற்காலத்தில் நடை பெற்ற பூசல்களுக்கும் வேறுபாடு உண்டு. நேரே இறை வனிடம் அன்பு பூண்டு எல்லையற்ற இன்னல்களைப் பொறுத் துக்கொண்டு வேறு எதனையும் சட்டை செய்யாமல் வாழ்ந்த வர்களை மட்டுமே பக்தர் அல்லது அடியார்’ என்று கூறு கிறோம். தாம் கொண்ட பக்தி அல்லது அன்புக்கு மாறுபட்ட வர்களை வெறுத்து அவர்களுடன் பூசலிட்ட பிற்காலத்தாரை அடியார்கள் என்று குறிப்பிடவில்லை. ஆனால் பெரிய புராண வரலாறுகளில் கூட் இப்படி வேற்றுச் சமயத்தாருடன் பூசலிட்டதைக் காண்கின்றோமே என்றால்,அவற்றை ஆழ்ந்து நோக்கினால், அவை அரசியல், சமுதாயப் பூசல்கள் என்பது நன்கு விளங்கும். அத்தகைய பூசல் கொஞ்சமே. ஏனைய அடியார்கள் வாழ்க்கையை ஆய்ந்தால் சேக்கிழார் கூறிய அடியார்கள் யார் என்பது நன்கு விளங்கும்.

9. சரிதமும், சரித்திரமும்

சரிதம், சரித்திரமும் என்ற இரண்டு சொற்களுக்கும் பெரும் பாலும் பொருள் வேறுபாடு இல்லாமலே நாம் வழங்குகிறோம். ஆனால், இக்கட்டுரையளவில் இவை இரண்டிற்கும் சில வேறுபாடுகள் கற்பிக்கப் பெறுகின்றன. சரிதம் என்ற சொல்லால் வாழ்க்கைக் குறிப்பு (Biography) என்ற பொருளும் சரித்திரம் என்ற சொல்லால் வரலாறு (History) என்ற பொருளும் இங்கே கொள்ளப்பெற்றுள்ளன. தமிழ் இலக் கியத்தைப் புரட்டிப் பார்த்தால் இவை இரண்டும் அங்கே இடம் பெறுமா?’ என்று கேட்கலாம். கேட்டு விட்டால் அதற்கு விடை அளிப்பது சற்றுக் கடினம்தான். இவை இரண்டிற்கும் நாம் என்ன பொருள் தருகிறோம் என்பதைப் பொறுத்தே மேல் கேள்விகளுக்கு விடை கூற முடியும்.