பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தேசீய இலக்கியம் முதன்முதலாகத் தோன்றிய சரித நூல் சிலப்பதிகாரம் ஆகும். இந்நூல் கோவலன், கண்ணகி வரலாற்றை முக்கிய மாகக்கொண்டு எழுந்ததே தவிர, இளங்கோவடிகளின் புலமையை வெளியிடுவதற்காக இயற்றப்பட்டதன்று. ஆனால், அவருடைய புலமையையும் அது வெளியிடுகிறதே என்றால் ஆசிரியருக்கு அது கருத்தன்று என்பது நன்கு விளங்கும். கம்பநாடன் இயற்றிய இராமாயணம் இதனினும் மாறுபட்டது. பழைய கதையை அவன் தேர்ந்து எடுத்தது. தன் புலமை வெளிப்பாட்டைக் கருதியேயாகும். ஆதலால், காப்பிய அமைப்பும் சிறப்பும் பின்னதில் மிகுதியும் இடம் பெறுகின்றன. இம்முறையில் பார்த்தால் திருத்தொண்டர் புராணம் சிலப்பதிகாரத்தைப் போன்றதேயாகும். அதில் வரும் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதே சேக்கிழாரின் தலையான நோக்கம். புலமை வெளிப்பாடு இரண்ட்ாவது நோக்கமேயாகும். மேலும், இந்நூல் நாயன் மார் சரித்திரத்தைக் கூற முற்பட்டதே தவிர, தமிழ்நாட்டின் சரித்திரத்தைக் கூறவரவில்லை. என்றாலும். அவர்கள் வாழ்க்கை நாட்டை. எவ்வளவு தூரம் பாதித்ததோ அந்த அளவிற்கு நாட்டுச் சரித்திரமும் அதில் இடம் பெறலாயிற்று, சிறந்த பெரியார் ஒருவருடைய சரிதத்தை ஒருவர் நன்கு எழுதவேண்டுமானால், எழுதுபவருக்குச் சில தகுதிகள் வேண்டும். சரிதத் தலைவருடைய வாழ்க்கை முழுவதையும் ஆசிரியர் நன்றாக அறித்திருத்தல் வேண்டும். பலரும் அறிந்த பகுதி போக, பிறர் அறிய இயலாதனவற்றையும் அறிந்திருத்தல் வேண்டும். இன்றேல், ஆசிரியருடைய நூல் நடுநிலையிலிருந்து நீங்கியதாகிவிடும் இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தெரிந்தவராக ஆசிரியர் இருக்க வேண்டும் என்று கூறியதால், சரிதத் தலைவர் காலத்தி லேயே நூலாசிரியரும் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆசிரியர் பி ற்காலத்தவராயினும் சரிதத் தலைவரின் வாழ்க்கையைப் பூரணமாக அறிந்து கொண் டிருத்தல் வேண்டும். அங்க ண ம் அறிந்துகொள்ளச் செய்யும் முயற்சியில் கிடைக்கும் எல்லாம். பொருள்களும்