பக்கம்:தேடி வந்த குயில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

தேடிவந்த குயில்


தமிழியக்கம் நூலின் தொடக்கப் பாட்டு இது; கரும்புதந்த தீஞ்சாறே கணிதந்த நறுஞ்சுளையே கவின் செய்முல்லை அரும்புதந்த வெண்ணகையே! அணிதந்த செந்நமிழே! அன்பே கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈடழித்து வரும்புதுமை நினைக்கையிலே மனம் பதைக்கும்! சொல்வதெனில் வாய் பதைக்கும்! தமிழ் இலக்கியம் கற்பவர்ளும், தமிழ் ஆராய்ச்சி செய்யப் புகுவோரும் ஓர் உண்மையை நேர் காணலாம். தொன்று தொட்டு ஒரு கூட்டம் தொடர்ந்து தமிழ் மொழியை ஒழித்துக் கட்டவும், தமிழ்ப் பெருமையைக் குறைத்துக் காட்டவும் சதி செய்து வருகிற உண்மையை அறியலாம். தமிழ் மொழியை அழிப்பதன் மூலம் தமிழினத்தை அழித்துவிட முடியும் என்ற குறிக்கோளை உன்டயதாக அந்தக் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழின் பகைவர் தன் பகைவர் என்று எண்ணி வாழ்ந்த வர் புரட்சிக் கவிஞர். அவர் ஒரு தமிழ் மறவனாக வாழ்ந்த்ார். வீறு சான்ற அவருடைய தமிழ்க்குரல் என்றென்றும் தமிழினத்துக்கு உணர்வூட்டிக் கொண்டே யிருக்கும், இப்படிப்பட்ட ஒரு புரட்சிப்பரம்பரையைச் சேர்ந்தவன் என்ற எண்ணம் என்னிலே ஒரு பெருமித உணர்வை எழுப்பு கிறது. அவருடைய தன்மானக் கொள்கை வழிபட்டு நிற்பவன் என்ற எண்ணம் என்னிலே ஒரு புத்துணர்வை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இந்த உணர்வும் எழுச்சியும் உடையதாக இளைய சமுதாயம் மலரவேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தப் புத்தகத்தை எழுதுகிறேன். புரட்சிக் கவிஞர் வழி நிற்போம்! புதிய தமிழ் உலகைப் படைப்போம்! пътут път8 яшйшат