பக்கம்:தேடி வந்த குயில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தேடிவந்த குயில்


அக்காலத்தில் முருகு சுப்பிரமணியன் கையெழுத்து இதழ் ஒன்று நடத்தினார், அதன் பெயர் 'இளந் தமிழன்' அவ்விதழில் ஒவ்வோர் இதழிலும் விளையாட்டுகளில் பயின்று வரும் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் பட்டிய லிட்டுக் கொடுப்பார். தமிழ் இளைஞர் கழகத்தினர் அச்சொற் களைப் பயன்படுத்தியே விளையாடுவர். தமிழ் இளைஞர் கழகம் ஆண்டுதோறும் பொங்கல் விழாக் காலத்தில் ஏழுநாட்கள் தமிழர் விழா நடத்துவது வழக்கம். இதில் பல தமிழறிஞர்கள் வந்து சிறந்த சொற் பொழிவுகள் ஆற்றுவார்கள். ஒரு தமிழ் விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வந்து சொற்பொழிவாற்றினார். அவருடைய சொற்பொழிவு இளம் உள்ளங்களைக் கிளர்ந்தெழச் செய்வதாய் இருந்தது. நெஞ்சில் ஒரு புத்துணர்ச்சியைப் பாய்ச்சுவதாய் இருந்தது. தமிழார்வத் தைக் கொழுந்துவிடச் செய்வதாய் இருந்தது. இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க புரட்சிக் கவிஞர் கோனாபட்டிலேயே ஒரு மாத காலத்துக்குமேல் தங்கினார். முருகு சுப்பிரமணியன் அவர்கள் வீட்டில்தான் அவர் சிறப்பு விருந்தினராகத் தங்கினார், முருகுவின் தாயார், தன் மகனின் இலட்சியத் தலைவருக்கு நல்ல விருந்து படைத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பாரதிதாசன் பேசிய முழக்கப் பேச்சைக் கேட்டு எழுச்சி பெற்றவர்களிலே நான் ஒருவன். அதுவரையில் பாரதி, நாமக்கல்லார், கவிமணி ஆகி யோரின் கவிதைகளையே படித்தறிந்திருந்த நான் பாரதி தாசன் கவிதைகள் நூல் படிக்கத் தொடங்கினேன். பாரதி தாசன் கவிதைகள் முழுவதும் நாவல் படிப்பதுபோல் ஆசை யோடு ஆர்வத்தோடு படித்து முடித்தேன். அவரையே இலக்கிய ஆசிரியராகக் கொண்டேன். அவர் கவிதைகளைப்