பக்கம்:தேடி வந்த குயில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம்...திருவிளக்கு

13


முருகு சுப்பிரமணியன் பாரதிதாசனின் விசிறி. ஆனால் தனித்தமிழ் பரப்புவதில் உறுதியான நோக்கம் உடையவர்: அவர் இளைஞர். பாரதிதாசனோ பெருங் கவிஞர். இருந்தா லும் அவர்கள் இருவரும் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள் வதில் வயது தடையாக இருக்கவில்லை. முருகு சுப்பிரமணியன் தனித் தமிழை வற்புறுத்திப் பேசுவார். பாவேந்தர் அதற்கு மறுப்புரை வழங்குவார். முருகு சுப்பிரமணியன், மறைமலை யடிகளாரின் நூல் களைப் படித்துப் பார்க்குமாறு பாவேந்தரை வற்புறுத்துவார். தம்மிடமிருந்த நூல்களையும்-அவற்றின் பகுதிகளையும் படித்துக் காட்டுவார். பாவேந்தரோ தனித்தமிழ் நடை முறையில் கையாள இயலாது என்று அடித்துச் சொல்வார். சில தனித்தமிழ்ச் சொல்லாக்கங்களைக் கிண்டலும் செய்வார். பாவேந்தர் தொடர்ந்து மறைமலையாரின் நூல்களைப் படித்தார். மறைமலையடிகளாரின் சமயக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத பாவேந்தர், மொழிக் கொள்கையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். இனித் தனித் தமிழிலேயே நூல்கள் எழுதுவது என்று உறுதி பூண்டார். உறுதி ஏற்ற பிறகு வெளிவந்த அவருடைய நூல்கள் முழுவதுமே. உரை நடை, பாட்டு எல்லாமே-தனித்தமிழ் நூல்களாக வெளி வந்தன. ஒரு நூலைத் தனித்தமிழ்த் தந்தையான மறைமலை யடிகளாருக்கே 'திருமுன் படையல்' ஆக்கினார். பாரதியாரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட பாவேந்நர் பிறகு பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண் டார். பெரியாரோடு முரண்பட்ட காலங்களில்கூட பெரியாரின் தன்மானக் கொள்கைகளில் அவர் முரண்பாடு கொள்ளவில்லை. பார்ப்பனிய வெறுப்பாளராகக் கடைசி