பக்கம்:தேடி வந்த குயில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி தலைமையில்

17


அக்கம்பக்கத்தில் எங்காவது பாரதிதாசன் பேசுகிறார் என்று செய்தியறிந்தால் போதும் நாங்கள் பறந்து கொண்டு தான் போவோம். அவ்வளவு உற்சாகம்! ஆவினிப்பட்டி என்ற ஊரில் பாவேந்தர் பேசுகிறார் என்ற செய்தி அறிந்தோம். துண்டறிக்கைகளை வாங்கிப் பார்த்த போது வியப்பாய் இருந்தது, கல்கி ஆசிரியர் தலமையில் ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் அந்த ஆண்டுவிழாக் கூட்டத்தில் பண்டிதமணியின் மாணவர் வித்துவான் விசு திருநாவுக்கரசு அவர்களும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் பேசுகிறார்கள் என்று அந்தத் துண்டறிக்கை கூறியது. கோனாபட்டு சரசுவதி உயர் நிலைப் பள்ளியில் நாங்கள் பயின்று கொண்டிருந்ாதாம். நால்வரும் கவிஞர்கள். நால்வரும் பாரதிதாசன் பரம்பரையில் பிற்காலத்தில் அறிமுகமானவர்கள். நாங்கள் நால்வரும் ஆவினிப்பட்டி போவதென்று முடிவெடுத்தோம். ராஜாஜியின் சீடரான கல்கி தலைமையில் பெரியாரின் தொண்டரான பாரதிதாசன் எப்படிப் பேசுகிறார் என்று பார்க்க வேண்டும். இதுதான் எங்கள் ஆவல்! ஆவினிப்பட்டிக்குப் பேருந்து கிடையாது. மாட்டுவண்டி தான் வாடகைக்குக் கிடைக்கும் ஒரே ஊர்தி. கார் உண்டு. ஆனால் அதில் பெரியதனக்காரர்கள் தான் போவார்கள். மாட்டு வண்டிக்கு வாடகை ரூபாய் ஐந்தாவது கேட் பான். எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது, நான்கு பேரும் ஆளுக்கு ஒன்றே கால் ரூபாய் செலவழிக்கக் கூட முடி யாதவர்கள். ஆகையால் ஆவினிப்பட்டிக்கு நடந்து போவ