பக்கம்:தேடி வந்த குயில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தேடிவந்த குயில்


தென்று முடிவு செய்தோம். மாலை 7 மணிக்கு கூட்டம். நண்பகல் உணவுக்குப்பின் இரண்டு மணியளவில் நடைப் பயணம் புறப்பட்டோம். பேசிக் கொண்டே நடந்ததில் தொலைவு தெரியவே யில்லை. இளையாத்தங்குடி போய் அங்குள்ள திருக் கோயி லைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து ஆவினிப்பட்டியை அடையும் போது மணி ஐந்து. பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் கூட்டத்திற்கு வருபவர் களுக்கு மாலைச் சிற்றுண்டியும், இரவு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள், சிற்றுண்டி யுண்டபின் கூட்டம் காணச் சென்றோம். பள்ளியின் மையக் கூடத்தில் கூட்டம், வண்ணத் தோரணங்கள் அழகு செய்தன, மாணவ மாணவியர் கலைநிகழ்ச்சிகள் முடிந்த பிறகு சரியாக ஆறு மணிக்கு கல்கி ஆசிரியர் வந்து தலைவர் இருக் கையில் அமர்ந்தார். வித்துவான் விசு. திருநாவுக்கரசும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்து தத்தம் இருக்கையில் அமர்ந்தார்கள், இறைவணக்கம் முடிந்தபின் பள்ளித் தலைவர் வரவேற் புரை வாசித்தார். தலைவர் கல்கி சுருக்கமாக முன்னுரை கூறி முடிவுரையில் விரிவாகப் பேசுவதாகக் கூறி அமர்ந்தார். அடுத்து(வித்துவான் விசு. திருநாவுக்கரசு அவர்கள், சிவப்பதி காரம்பற்றி ஒர் இனிய உரையாற்றினார். வித்துவான் விசு திருநாவுக்கரசு பண்டிதமணியின் அன்பு மாணவர். சிலப்பதி காரத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவர். பெண்போல் இனிய குரலில் அவருடைய தமிழ்ப் பேச்சு தேன்போல் இனிமையா யிருந்தது. அதன்பிறகு தலைவர் புரட்சிக் கவிஞரைப் பேசுமாறு அழைத்தார். தாங்கள் நிமிர்ந்து உட்கார்ந்தோம். கோடையிடி முழக்கம் தொடங்கியது.