பக்கம்:தேடி வந்த குயில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி தலைமையில்

19


அடலேறு போன்ற பார்வையோடு, அதட்டும் குரலில் பாவேந்தரின் வீரச் சொற்பொழிவு தொடங்கியது. இந்த நாட்டில் அறியாமை எவ்வாறு வளர்ந்தது? சாதி பேதம் உண்டாக்கியவர் யார்? கடவுள்களால் ஏற்பட்ட கலகங்கள் என்ன? தலையில் பிறந்தவர்கள் காலில் பிறந்தவர் களை அழுத்தி வைத்து நடத்தும் கொடுமைகள் என்ன? இத் துயரத்திலிருந்து தமிழன் மீள வழி என்ன? வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், சாஸ்திரங் கள் மறுநீதி ஆகிய அனைத்தும் இந்த நாட்டு மக்களை அறியாமைக் குழியில் அழுத்திவைத்து பேதப்படுத்தி முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தும் கருவிகளாய் இருக்க-அவற்றைக் காப்பாற்றும் இனத்தவர்கள் நாட்டுத் துரோகிகள் அல்லா? இப்படிப் பச்சை பச்சையாகக் கல்கியின் இனத்தவர்கள் ஐயாயிரம் ஆண்டுகளாக மற்ற இனத்தவர்களின் முன் னேற்றத்துக்கு முட்டுக்கட்டைபோட்ட செயல்களை யெல் லாம் அடுக்கடுக்காகச் சொல்லி ஆத்திரப்பட்டார் புரட்சிக் கவிஞர். எரிமலை குமுறி ஓய்ந்தது. கல்கி முடிவுரை பேச எழுந்தார். கல்கி அந்தக் காலத்தில் நகைச் சுவை எழுத்தாளராகப் பெயர் பெற்றவர். தன் இனத்தைத் தாக்கிப் பேசிய பாரதிதாசனுக்கு நகைச் சுவைக் கிண்டலாகவே மறுப்புச் சொல்வார் என எதிர்பார்த்தோம். கல்கி பேசத் தொடங்கினார். தமிழ் அன்பர்களே,