பக்கம்:தேடி வந்த குயில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தேடிவந்த குயில்


தமிழ் பாஷை (மொழி) மிக இனிமையானது என்று சொல்வார்கள். தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. அதை இங்கே நிதர்சனமாகக் (நேருக்குநேர்) கண்டோம். வித்துவான் விசு. திருநாவுக்கரசு அவர்கள் இனிய தமிழில், சிலப்பதிகாரத்தை விளக்கி எல்லோரும் களிப்படை யுமாறு பேசினார். அவருடைய குரலும், பெண்ணின் குரல் போல் மிக இனிமையாய் இருந்தது. அவர் எடுத்துக் கொண்ட தலைப்பும் இனிமையாய், சொற்பொழிவும் இலக்கியநயம் கூறும் சுவையுடையதாய் இருந்தது. தமிழ் மொழி இனிமையானது. இனிமை மட்டும் தானா தமிழில் உள்ளது. அதற்கு வீரம் இல்லையா? சென்ற மாதம் சென்னையில் தமிழுக்கு வீரம் கிடையாது என்று ஒரு தமிழ் எழுத்தாளர் பேசினார். (திரு. க. நா. சுப்பிரமணியன் என்பவர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இவ்வாறு கூறிப் பெரும் எதிர்ப்புக்கு ஆளானார். அதைத் தான் கல்கி இங்கே குறிப்பிடுகிறார்) தமிழுக்கு வீரம் இல்லை என்று கூறிய அந்த எழுத்தாளர், இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தால், தமிழ் எவ்வளவு வீரமுடையது என்பதை நிதரிசனமாக (நேராகக்) கண்டிருப்பார். ஆம். அவர் நமது புரட்சிக் கவிஞருடைய சொற்பொழிவை நேரில் கேட்டிருக்க வேண்டும். வீரத்தில்-தமிழ் வேறு எந்த மொழிக்கும் சளைத்த தல்ல என்பதைப் பார்த்திருக்கலாம். எரிமலை குமுறுவது போலவும், சிங்கம் கர்ஜிப்பது போல வும், புயல் வீசுவது போலவும், வெள்ளம் புரளுவது போலவும், எவ்வளவு ஆவேசமாகப் பேசினார் புரட்சிக் கவிஞர். இவ்வளவு ஆவேசத்தோடும் உத்வேகத்தோடும் புரட்சிக் கவிஞர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் பொன்னான கருத்துக்கள். நம் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள். இப்படிப் புரட்சிகர