பக்கம்:தேடி வந்த குயில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி தலைமையில்

21


மாகச் சிந்தித்தால்தான் தமிழ்நாடு விழிப்படையும். தூங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி யெழுப்ப இப்படிப்பட்ட உத்வேகமான பேச்சுக்கள் தேவை. புரட்சிக் கவிஞரின் ஒவ்வொரு கருத்தும் நம் நாட்டுக்கு அத்தியாவசியமானது என்று நான் அடித்துச் சொல்வேன். இவ்வாறு கல்கி புரட்சிக் கவிஞரைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து வந்த கல்கி ஏட்டில் புரட்சிக் கவிஞரோடு தாம் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத் தைப் போட்டு, ஆண்டுவிழா நிகழ்ச்சிபற்றி சிறிய செய்தி யொன்றும் வெளியிட்டிருந்தார். இரவு நெடுநேரம் ஆகிவிட்டபடியால் நானும் மு, அண்ணாமலையும், நாகமுத்தையாவும் இராம. வே. சேதுராமனும் அன்று இரவு ஆவினிப்பட்டிப் பள்ளிக்கூடத் திலேயே தூங்கிவிட்டு காலையில் எழுந்து கோனாபட்டுக்கு நடந்து வந்தோம். பாரதிதாசனாரின் ஆவினிப்பட்டிப் பேச்சு இன்றும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.