பக்கம்:தேடி வந்த குயில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

23


"அதைத்தான் சொல்கிறேன். அவன் உ சிவமயம் எழுதினால் நீ தமிழ் வாழ்க எழுதுவாய்! ஒரு வழக்கத்தை விட்டால் அந்த இடத்தில் இன்னொரு வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. தமிழ் வாழ்வதற்காகத் தான் நாம் சொற்பொழிவு ஆற்றுகிறோம்; கவிதை எழுது கிறோம், நூல்கள் படைக்கிறோம். இப்படி யெல்லாம் செயல் படும்போது, அதற்கு ஏன் பட்டயம் எழுத வேண்டும்.’’ என்று தொடர்ந்து பேசினார். "ஐயா, அடித்து விடவா?" இது, நான். “எழுதியதை அடிக்க வேண்டாம். தொடர்ந்து நான் சொல்வதை எழுது' என்று துண்டறிக்கையை முறையாகச் சொல்ல நான் எழுதி முடித்தேன். செயலாற்றுபவனுக்கு முழக்கங்கள் தேவையில்லை என்ற கருத்தை மனத்தில் படிய வைத்துக் கொண்டேன். 来源 事 盛 கோனாபட்டில் ஒரு நண்பன் வீட்டில் கவிஞருக்கு விருந்து, நான் அன்று பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால் விருந்துபற்றிய செய்தியும் அறியவில்லை. மறுநாள் என் நண்பன் கூறினான். 'நேற்று ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்டாய். அதனினும் மேலாக ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டாய்” என்றான். "அப்படி என்ன சிறப்பான வாய்ப்பு' என்று கேட்டேன் நான். - விருந்து முடிந்தவுடன் புரட்சிக் கவிஞர் இசையமுதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் இசையோடு பாடினார். மாணவர்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் பாடினார். அருமை யான இசை ஞானம். நல்ல குரல்" என்றான் நண்பன்.