பக்கம்:தேடி வந்த குயில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தேடிவந்த குயில்


'பாரதிதாசன் குரலையா நீ பாராட்டுகிறாய்?" என்றேன் நான். 'பேச்சைமட்டும் கேட்டுவிட்டு நீ பேசுகிறாய். பேசும் போதுதான் கரகரப்பான குரலில் பேசுகிறார். பாடும்போது குரல் அமுதமாகக் குழைகிறது' என்றான் நண்பன். நண்பன் சொல்லச் சொல்ல நல்ல வாய்ப்பை இழந்து விட்டோம் என்ற மனக்குறை உண்டாயிற்று. பாட்டுப்பாடிய நிகழ்ச்சியைப்பற்றி மேலும் கூறினான் நண்பன். புரட்சிக் கவிஞர் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கண்டித்து இசையமுது நூலில் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார். பாரதிதாசன் தொடர்ந்து புகைபிடிப்பவர். அவர் அந்தப் பாடலைப் பாடி முடித்தவுடன் ஒரு மாணவன் எழுந்து "ஐயா, இது ஊருக்கு உபதேசமா?' என்று கேட்டான். "நீ கேட்டது சரிதான். நான் இந்தத் தீய பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். என்னைப்போல் நீயும் கெட்டுப் போகாதே என்று சொல்கிறேன். மற்றவர்களை எச்சரிக்கை செய்ய எனக்கு உரிமையில்லையா?” என்று கேட்டார். மாணவர் பேசாமல் அமர்ந்து விட்டார். நன்பன் சொன்னான்: "அவர் கேட்பது நியாயந் தானே!” நான் சொன்னேன்: 'நியாயந்தான்! ஆனல் அவர் தாமும் கைவிட்டுவிட்டுச் சொன்னால் அந்த நியாயம் வலுவான நியாயமாகும்!” என்றேன். “அடுத்த முறை நாம் இந்தக் கருத்தை அவரிடம் கூற வேண்டும்’ என்றான் நண்பன். 常 事 事