பக்கம்:தேடி வந்த குயில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

25


முருகு சுப்பிரமணியம் திருமணத்திற்குப் புரட்சிக் கவிஞர் வந்திருந்தார். முருகு சுப்பிரமணியம் தம் திருமண நினைவாக விருந்து என்று ஒரு சிறிய புத்தகத்தை அச்சிட்டு, திருமணத் திற்கு வந்தவர்களுக்கு வழங்கினார். என் கவிதைகள் ஐந்தும், மு. அண்ணாமலை கவிதைகள் ஐந்தும் அடங்கிய சிறு நூல் தான் விருந்து. இந்த நூலுக்கு அறிஞர் அப்பாத்துரையார் அணிந்துரை வழங்கியிருந்தார். திருமணத்திற்குப் பிறகு பாரதிதாசன் ஆத்தங்குடி வந்திருந்த போது, பாரதிதாசனிடம் இந்த நூலைக் கொடுத்தோம். 'ஐயா, இந்தக் கவிதை நூலைப்பற்றிய தங்கள் கருத்தை" எழுதிக் கொடுத்தால் எங்களுக்கு ஊக்கம் வளரும் என்றோம். பாரதிதாசன் உடனே ஒரு அகவல் எழுதினார். அந்த அகவலில் எங்கள் கவிதைகளைப் பாராட்டினார். முடிவில் இளங் கவிஞர்தாம் இருவரும் உளம் பெரிதாகி உவப்புற வாழ்கவே! என்று வாழ்த்தினார். ஒரு பெருங் கவிஞரின் பாராட்டைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சி எங்கள் இதயத்தில் கூத்தாடியது. 案 拳 掌 ஆத்தங்குடியில் நான் திராவிடர் கழகம் ஒன்று தொடங் கினேன். பெரியாருக்குக் கடிதம் எழுதி அவருடைய வாழ்த்துப் பெற்றேன். பெரியார் எனக்கு 25 ரசீதுகள் கொண்ட சந்தாப் புத்தகம் ஒன்று அனுப்பியிருந்தார். உறுப்பினர் கட்டணம் நான்கணா. (25 காசு) அதில் இரண்டனா கிளைக் கழகத் துக்கு. ஓரணா மாவட்டக் கழகத்துக்கு. ஒரணா தலமைக் கழகத்துக்கு. தே-2