பக்கம்:தேடி வந்த குயில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தேடிவந்த குயில்


நான் 25 உறுப்பினர்கள் சேர்த்து கழகச் சட்ட விதிப்படி மாவட்டக் கழகத்துக்கும் தலைமைக் கழகத்துக்கும் உரிய தொகைகளை ஒரு ரூபாய் ஒன்பதனா வீதம் அனுப்பி வைத்தேன். 25 உறுப்பினர்கள் சேர்த்தாயிற்று. கிளைக் கழகம் ஒன்று தொடங்க வேண்டும். அதற்கு ஒர் இடம் வேண்டும். திராவிடர் கழகம் என்றால் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள். சாமி இல்லை என்று சொல்லுகிற கட்சி-இடங் கொடுத்தால் பாவம். அது மட்டு மல்ல இடங் கொடுப்பவரையும் துாற்றத் தொடங்கி விடுவார்கள். இரண்டொரு பெரியவர்களிடம் போய்க் கேட்டபோது, 'ஒழுங்காப் படிங்கடா. சாமி இல்லை பூதம் இல்லை என்று கெட்டுப் போகாதீங்கடா” என்று பதில் வந்தது. ஆத்தங்குடி சிவன் கோயில் மிக அழகானது. அதன் எதிரில் உள்ள ஊருணி (குடி தண்ணிர்க் குளம்) கூட மிக அழகானது. சிவன் கோவில் எதிர் வாடையில் ஒரு பெரிய வீடு. அதன் சொந்தக்காரர் காசி அய்யா, காசி அய்யா குடும்பத்தினர் சிவன் கோயில் பக்கத்தில் வேத பாடசாலைக்கு என்று ஒரு கட்டிடம் கட்டிவிட்டிருந் தார்கள். அதில் பத்துப் பிராமணச் சிறுவர்களுக்கு ஒரு வாத்தியார் வைத்து சாப்பாடு போட்டு வேதம் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இது பரம்பரைத் தருமமாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் காசி அய்யா என்னிடம் மிகவும் அன்புடையவர். எப்போது பார்த்தாலும் 'தம்பி, தம்பி” என்று அழைத்து நலம் விசாரிப்பார். அவருடைய பெரிய மாளிகையின் முன் புறத்தில் கார் நிறுத்துவதற்கென்று இரண்டு அறைகள் (Shed) இருந்தன.