பக்கம்:தேடி வந்த குயில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

27


ஒரு காலத்தில் கார் வைத்திருந்தார்கள். ஒரு அறையில் கார் நிற்கும்; மற்றொன்றில் மாட்டு வண்டி நிற்கும். நான் குறிப்பிடுகின்ற காலத்தில் அவர்களிடம் காரும் இல்லை; மாட்டு வண்டியும் இல்லை. இரண்டு அறைகளும் பூட்டியே கிடந்தன. நான் ஒரு நாள் காசி அய்யாவை அணுகினேன். 'ஐயா, நாங்கள் ஒரு சங்கம் தொடங்கி யிருக்கிறோம். அதற்கு ஓர் இடம் வேண்டும். கார் நிறுத்துகின்ற இடத்தைக் கொடுத் தால் ஏதாவது வாடகை கொடுத்துவிடுகிறோம்” என்று கேட்டேன். "சங்கம் என்றால் என்ன?’ என்று காசி அய்யா விளக்கம் கேட்டார். "மாணவர்கள் அங்கு ஒன்றாகக் கூடுவோம். நூல் நிலையம் வைத்துப் புத்தகங்கள் படிப்போம். பத்திரிகைகள் வரவழைத்துப் படிப்போம். கூட்டம் போட்டுப் பேசுவோம்.' 'நல்ல காரியம்தான். மாதம் 5 ரூபாய் வாடகை கொடுத்துவிடு. நல்ல நாளாகப் பார்த்து சாவி வாங்கிக் கொண்டுபோ” என்றார் காசி அய்யா. "நாங்கள் சிறுவர்கள். ஐந்து ரூபாய் கொடுக்க முடியாது, இரண்டு ரூபாய் தருகிறோம்” என்றேன் நான். “சரி பரவாயில்லை. இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சீட்டுப் போடக் கூடாது. கூட்டம் போட்டு வெள்ளைக்காரனை எதிர்த்துப் பேசக் கூடாது” இப்படிப் பல கட்டுப்பாடுகளைச் சொல்லி காசி அய்யா இடத்தைக் கொடுத்தார். இடம் பிடித்தாயிற்று. திராவிடர் கழகம் தொடக்கவிழா ஒன்று நடத்த வேண்டும். இதற்கு யாராவது ஒரு தலைவர் வந்தால் நன்றாய் இருக்குமே என்று எண்ணினேன்.