பக்கம்:தேடி வந்த குயில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தேடிவந்த குயில்


பாரதிதாசன் அப்போது காரைக்குடியில் இருந்தார். திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம சுப்பையா. புரட்சிக் கவிஞர் அவருடைய வீட்டில் தங்கி யிருந்தார். சுற்றியுள்ள ஊர்களில் சுயமரியாதைப் பிரசாரம் செய்யப் போவதும், இராம சுப்பையா அவர்கள் வீட்டில் தங்கியிருப்பதுமாக இருந்தார். - ஏற்கெனவே யுள்ள அறிமுகத்தை வைத்து பாரதி தாசனையே அழைத்துவந்து திராவிடர்கழகத் தொடக்க விழாவை நடத்துவதென்று முடிவு செய்தேன். ஒருநாள் கூட்டம் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு, கழக உறுப்பினர்களை யெல்லாம் மாலையில் கூட்டம் நடத்தத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு நான் காரைக் குடிக்குச் சென்றேன். காரைக்குடிக்குப் புறப்படு முன் என் தாயாரிடம் சென்றேன். "ஆத்தா, இன்று எங்கள் சங்கத்தில் கூட்டம் போட்டிருக் கிறோம். காரைக்குடியிலிருந்து ஒரு வாத்தியார் பேச வருகிறார். அவருக்கு மத்தியானம் விருந்து வைக்க வேண்டும். நம் வீட்டிற்குக் கூட்டி வரவா?’ என்று கேட்டேன். என் தாயார் புதிதாகவரும் தலைவருக்கு விருந்து சமைக்க ஒப்புக் கொள்வார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம் எனக்கிருந்தது. ஒருவேளை ஒப்புக்கொள்ளாவிட்டால், யாராவது ஒரு அய்யர் வீட்டில் ஏற்பாடு செய்யலாம் என்ற துணிச்சல் இருந்தது. வீட்டிற்குச் சில சமயம் பார்ப்பன விருந்தாளிகள் வருவார்கள். நம் வீட்டில் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஊரில் உணவு விடுதி (ஒட்டல்) எதுவும் கிடையாது. இந்த நிலையில் குறிப்பிட்ட சில அய்யர் வீடுகளில் சென்று ஆள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுத்துவிட்டால்