பக்கம்:தேடி வந்த குயில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

29


அப்பளம் பாயசத்தோடு விருந்து தயாரித்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அய்யர் வீட்டில் பாரதிதாசனுக்கு விருந்து ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். என் தாயார். 'நல்லாக் கூட்டி வா. நான் சமைத்து வைக்கிறேன்” என்று கூறினார்கள். கூடவே, "அவர் என்ன சாதி?” என்று கேட்டார்கள். சாதியைப்பற்றி ஏன் விசாரிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை வருகிறவர் அரிசனராக இருந்தால், என் தாயார் விருந்து வைக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அப்படியே ஒப்புக் கொண்டாலும். வீட்டுக்குள் கூட்டிவர அனுமதிக்க மாட்டார்கள். வெளித் திண்ணையிலேயே சோறு போட்டு அனுப்பி விடுவார்கள். “முதலியார்” என்று பதில் அளித்தேன். 'அப்படியானால் சைவமாகத்தான் சமைக்க வேண்டும்’ என்றார்கள். விருந்துக்கு ஏற்பாடு செய்த மனநிறைவோடு, காரைக் குடிக்குப் புறப்பட்டுச் சென்றேன். இராம சுப்பையா அவர் களின் வீட்டை அடைந்தேன். புரட்சிக் கவிஞர் முகப்பிலேயே உட்கார்ந்திருந்தார். நேரே அவரிடம் சென்றேன். ஆத்தங்குடியில் திராவிடர் கழகம் தொடக்கி வைக்க வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். 'தொடர்ந்து கூட்டங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். இன்றைக்குத்தான் ஒய்வெடுக்கலாம் என்று இருக்கிறேன். • 3 & இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்' என்றார், "இன்று எங்களுக்கு விடுமுறை. எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். நண்பர்கள் ஆவலாய் இருப்பார்கள். இன்றே வர வேண்டும்" இது என்னுடைய கெஞ்சல்,