பக்கம்:தேடி வந்த குயில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தேடிவந்த குயில்


எனக்கு ஒய்வு வேண்டாமா? இது புரட்சிக் கவிஞரின் கேள்வி. எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் இராம சுப்பையா குறுக்கிட்டார். 'தம்பி, மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். அவருக்கு உற்சாகம் கொடுக்க வேண்டியது நமது கடமை. ஐயா, இன்று ஆத்தங்குடி போய் வந்து விடுங்கள் நாளை ஒய்வெடுத்துக் கொள்ளலாம்” என்றார். "நாளை திருப்பத்துர்க் கூட்டம் இருக்கிறதே? இது புரட்சிக் கவிஞர் பதில். "திருப்பத்துரரில் எத்தனையோ கூட்டங்கள் நடத்தி விட்டோம். ஆத்தங்குடியில் இது முதற் கூட்டம். இளைஞர் களை ஏமாற்றம் அடையச் செய்யக் கூடாது. திருப்பத்துார்க் கூட்டத்தை வேறொரு நாள் வைத்துக் கொள்ளலாம்.” இராம சுப்பையா எனக்கு ஆதரவாகப் பேசிப் புரட்சிக் கவிஞரை ஒப்புக்கொள்ளச் செய்தார். 'சரி மாலையில் புறப்படலாம்” என்றார் கவியரசர். 'பகல் சாப்பாடு எங்கள் வீட்டில் தயாராகிறது. மாலையில் கூட்டம் முடிந்ததும் இரவு உணவுக்குப் பிறகு காரைக்குடியில் கொண்டுவந்து விட்டுவிடுகிறேன்” என்று கூறினேன். இராம சுப்பையாவையும் அழைத்தேன். இயக்க வேலைகள் நிறைய இருப்பதால், வர இயலவில்லை என்று கூறிவிட்டார் அவர். பதினொருமணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, காரைக்குடியில் இருந்த அச்சகம் ஒன்றுக்குச் சென்றேன். கூட்ட அறிக்கைகள் ஆயிரம் உடனடியாக அச்சிட்டுத் தர வேண்டினேன். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் அச்சிட்டுக் கொடுத்தார்கள்.