பக்கம்:தேடி வந்த குயில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தேடிவந்த குயில்


"நாம் போகிற வழியெல்லாம் எவனோ துண்டறிக்கை போடுகிறானே? என்ன செய்தி? பார்க்கலாம்” என்ற கவிஞர் வழியில் அறிக்கை எடுத்த சிறுவன் ஒருவனை அழைத்து துண் டறிக்கையை வாங்கிப் பார்த்தார்.

அடே! நம்ம செய்தி! யார் இங்கெல்லாம் போடுகிறார் கள்?' என்று கேட்டுக் கொண்டே வெளியில் எட்டிப் பார்த்தார்.

"நான்தான்!” என்று உள்ளேயிருந்து குரல்கொடுத்தேன். திரும்பிப் பார்த்தார்.

என் கையில் ஒருகட்டுத் துண்டறிக்கைகள் இருந்ததை அப்போதுதான் கவனித்தார்.

'அட இவனே! என்னையும் வைத்துக் கொண்டு நீ துண் டறிக்கை போடுகிறாயே! பார்க்கிறவன் என்ன நினைப்பான். நானே துண்டறிக்கை போட்டுக்கொண்டு போவதாக நினைப் பானே!” என்று சலிப்பாகக் கூறினார்.

'பயப்படாதீர்கள். நீங்கள் தான் பாரதிதாசன் என்று இந்த ஊர்மக்களுக்கு இப்போது தெரியாது. அதனால் நீங்களே சுயவிளம்பரம் செய்து கொள்வதாக நினைக்க மாட்டார்கள்” என்றேன் நான்.

இப்படியாக வழியெல்லாம் விளம்பரம் செய்துகொண்டே ஆத்தங்குடிக்கு வந்து சேர்ந்தோம். ஆத்தங்குடியில் முத்துப் பட்டணம் என்பது ஒரு சிறுபகுதி. அந்தப் பகுதியில் இருந்த ஒரு பழைய வீடு எங்கள் வீடு.

வீட்டிற்குப் புரட்சிக் கவிஞரை அழைத்து வந்தேன். சிறிது நேரத்தில் உணவு தயாராக இருப்பதாக என் அன்னை யார் கூறினார்கள்.

வெளியூர் முதலியாருக்கு என்று என் அன்னையார் அருமையான சைவவிருந்து தயாரித்து வைத்திருந்தார்கள்