பக்கம்:தேடி வந்த குயில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடியில் பாரதிதாசன்

33


சாம்பார், குப்பு, ரசம், பருப்பு நெய், அப்பளம், பாயசம், ஐந்துவகைக் கறிகள் இப்படிச் சிறப்பான விருந்தாக அமைந்த இந்த உணவை, பாவேந்தர் சரியாகச் சாப்பிடவில்லை. பெய ருக்குச் சிறிது சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டார்.

சமையலில் ஏதேனும் குறையா என்று அன்னையார் என்னை வினவ, அவர் எப்பொழுதுமே கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார் என்று நான் சொல்லி வைத்தேன்.

சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பாரதிதாசன் இரண்டு மணியளவில் என்னை யழைத்தார்.

"கூட்டம் எத்தனை மணிக்கு?' என்று கேட்டார். “ஐந்தரை மணிக்கு” என்றேன்.

'முன்னாலேயே வைத்துக் கொள்ளக் கூடாதா?” என்றார்.

'ஐந்தரை மணிக்குத்தான் அறிவித்திருக்கிறோம். அதற்கு முன்னால் யார் வருவார்கள்?' என்றேன் நான்.

வீட்டில் அடுக்களைப் பகுதியிலே என் தாயார், தமக்கை யர் தங்கை ஆகியோர் இருந்தார்கள்.

முன்பகுதியில் நானும் அவருந்தான். அவரோடு சரளமாகப் பேசிக் கொண்டு இருக்கக் கூடியவனல்ல நான். அதற்குரிய வயதும் எனக்கு இல்லை.

தனிமையை அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. பொழுதுபோவது மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும். புதிதாகச் சிறைப்பட்ட புறாப்போல் துடித்துக் கொண்டிருந்தார். -

மூன்று மணியளவில் தியாகராசன் செட்டியார் எங்கள் வீட்டுக்கு வந்தார்.