பக்கம்:தேடி வந்த குயில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகப்பா கல்லூரியில் பர்மாவில் எட்டாண்டுகள் இருந்தபின் தமிழகம் திரும்பி னேன். சென்னையில் நான் பவழக்காரத் தெரு நகர விடுதி யில் தங்கியிருந்தேன், நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு கவிஞர் நாக முத்தையா என்னை வந்து பார்த்தார். முத்தையா என் பள்ளித் தோழர். பொன்னியில் பாரதிதாசன் பரம்பரையில் அறிமுகமானவர். பாரதிதாசனிடம் பெரு மதிப்புக் கொண்டவர். என்னிடம் மிகுந்த அன்பும் நட்புறவும் கொண்டவர். நாக முத்தையா என்னைவிட ஒரு வயது குறைந்தவர். ஆனால் அவர் தொடக்க முதல் வாடா போடா என்று பேசுவதும் நான் அவரை வாருங்கள் இருங்கள் என்று பணிவோடு பேசுவதும் வழக்கம். பர்மாவிலிருந்து வந்த நான் திரும்பிப் போக விசா எடுத்துக் கொண்டு தான் வந்திருந்தேன். ஆனால் என்னைத் திரும்பிப் போகவிடாமல் சென்னையிலேயே நிலையாகத் தங்க வைக்க நாக முத்தையா பெரும்பாடு பட்டார். வாரம் ஒரு முறையாவது என்னை வந்து பார்க்காமல் இருக்கமாட்டார், எப்போதும் என்னுடன் இருப்பதை மிகவும் விரும்புவார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றிய திரு முத்தையா மிக இளம் வயதில் இறந்து விட்டார்.