பக்கம்:தேடி வந்த குயில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகப்பா கல்லூரியில்

41


சென்னையில் நாக முத்தையாவை சந்தித்த நான் திரும்ப வும் சென்னை வருவதாகக் கறி விட்டு சொந்த ஊரான முத்துப்பட்டணம் போயிருந்தேன். அங்கு'இருந்த போது காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாக் கவியரங்கம் நடப்பதாக அழைப்பு வந்தது. புரட்சிக் கவிஞரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்கக் கவியரங்கிற்கு நான் சென்றேன். கோனாபட்டிலும் காரைக்குடியிலும், பொன்னி யிதழில் துணையாசிரியராகப் பணியாற்றிய போது புதுக்கோட்டை யிலும், பிறகு பர்மா புறப்பட்டுச் செல்லும் போது சென்னை யிலும் பாரதிதாசனை சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இடையில் எட்டாண்டுகள் தமிழகத்தில் நான் இல்லை. மீண்டு வந்திருக்கிறேன், பாரதிதாசன் என்னை நினைவில் வைத்திருப்பாரா? சொன்னால் நினைவு படுத்திக் கொள்வாரா? மறந்து போயி ருப்பாரா? புதிதாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டி வருமா? இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்துக் கொண்டே காரைக்குடிக்குச் சென்றேன். அழகப்பா கல்லூரியில் விழாப் பந்தலுக்குச் சென்றேன். மேடையின் முன் முதல் வரிசையில் ஓர் ஒரத்தில் சில நண்பர்களுடன் அமர்ந்தேன், புரட்சிக் கவிஞர் வந்தவுடன் கவியரங்கம் தொடங்கும் என்றார்கள். கால்மணி நேரம் காத்திருந்தேன், அவரை அழைத்து வரும் திசை நோக்கி விழிகள் பூத்திருந்தன. அதோ புரட்சிக் கவிஞர் வந்துவிட்டார். தே-3