பக்கம்:தேடி வந்த குயில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் பாரதிதாசன் பொன்னி இதழில் நான் துணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஏழு ஆண்டுகள் நிகழ்ந்த இரண்டாவது உலகப் பெரும் போரில், பர்மா சப்பானியரிடம் சிக்கிக் கொண்டது. என் தந்தையார் பர்மாவில் சிக்கிக் கொண்டிருந்தார். சப்பானியர் பர்மா மலேயாவிலிருந்து விரட்டப் பட்டதும் சப்பானில் அமெரிக்கர்கள் முதன்முதலில் அணுக்குண்டு போட்டதும் பெரிய வல்லரசாகத் திகழ்ந்த சப்பானியரை அடக்கி ஒடுக்கி அடிமை கொண்டதும் உலக வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவிருக்கும், கடிதப் போக்குவரத்தே இல்லாதிருந்த பர்மாவுடன் உலகப்போர் முடிந்தபின் கடிதப் போக்குவரவு தொடங்கியது. கப்பல் போக்கு வரவும் தொடங்கியது. தந்தையார் இருக்கும் பர்மிய நாட்டுக்குப் போக விரும்பி னேன். தந்தையாருக்கு எழுதினேன். வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் பர்மாவுக்குச் செல்ல பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பர்மாவும் இந்தியாவும் தனித் தனி உரிமை நாடுகளாகிவிட்டபடியால், ஒரு நாட்டிலிருந்து ம்ற்றொரு நாட்டிற்குச் செல்ல, இரு நாட்டு அரசுகளிடமிருந்