பக்கம்:தேடி வந்த குயில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் பாரதிதாசன்

45


தும் அனுமதி வாங்க வேண்டும். நான் அனுமதி வாங்கி அனுப் பும்படி எழுதிய கடிதத்திற்கு தந்தையார் அவர்கள் தமிழகத்தி லேயே ஒரு வேலை தேடிக் கொள்ளும்படி எழுதி யிருந்தார் கள். ஒன்றை நினைத்துவிட்டால் அதை நினைத்தபடி முடிப் பது என் இயல்பாக இருந்தது. - தந்தையார் அனுமதி வாங்கி அனுப்பப் போவதில்லை என்று நன்கு தெரிந்து விட்டது. இருந்தாலும், போயே தீர்வதென்று முடிவு செய்தேன். இரங்கூனில் இருந்த உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதி னேன். அவர் எனக்கு விசா எடுத்து அனுப்பினார். தாயாரிடம் வழிச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டேன். சென்னை வந்த்ேன். பாஸ்போர்ட் விசா போன்ற வற்றைப் பதிவு செய்து கொண்டு கப்பல் சீட்டுக்கு முயன்றேன். போருக்கு முன் வாரம் இருமுறை கப்பல் போக்குவரத்து இருந்தது. போருக்குப் பிறகு மாதம் ஒருமுறை தான் கப்பல் போய் வந்தது. நான் புறப்பட்ட சமயம் அந்த மாதம் புறப்பட வேண்டிய சோனாவதி என்ற கப்பல் அந்தமாதம் பழுது பார்க்கப் போயிருப்பதால் அடுத்த மாதம்தான் வரும் என்று கப்பல் நிறுவனத்தார் கூறிவிட்டார்கள். என்னுடைய விசாவில் குறிப்பிட்டிருந்த காலத்திற்குள் என்னால் புறப்பட முடியாதென்ற நிலை ஏற்பட்டது. மீண்டும் பர்மிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்கலாம் என்று கூறினார்கள். கல்கத்தா சென்றால் நாள்தோறும் செல்லும் வானூர்தி யில் செல்லலாம் என்று நகர விடுதியில் இருந்தவர்கள் வழி காட்டினார்கள்,