பக்கம்:தேடி வந்த குயில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தேடிவந்த குயில்


சென்னையிலிருந்து இரங்கூனுக்குக் கப்பல் கட்டணம் ரூ 60|. ஆனால் கல்கத்தா செல்ல இரயிலுக்கு ரூ 30/-ம் கல்கத் தாவிலிருந்து இரங்கூனுக்கு வானூர்திக்கு ரூ. 250/-ம் செல வாகும் என்றார்கள். முன்வைத்த காலைப் பின்வாங்கலாகா தென. கல்கத்தா போய் இரங்கூன் போவதென்று முடிவு செய்தேன். மறுநாள் இரயிலில் புறப்பட வேண்டும். அன்று காலை ஏதோ வேலையாகத் தம்பு செட்டித் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரில் புரட்சிக் கவிஞர் நாலைந்து தோழர்களுடன் சிங்க ஏறுபோல் நடந்து வந்து கொண்டிருந்தார். நெருங்கி வந்ததும் "அய்யா வணக்கம்!” என்று கை குவித்தேன். 'அட இவனே! இங்கே சென்னைக்கு என்ன வேலையாய் வந்தாய்?" என்று கேட்டார் கவிஞர். 'இரங்கூனுக்குப் போகிறேன் அய்யா' என்றேன். ‘இரங்கூனா? இங்கிருந்து எவ்வளவு தொலைவிருக்கும்?" என்று கேட்டார் கவிஞர். 'ஆயிரம் மைல்” என்றேன், "எப்பொழுது திரும்பி வருவாய்?" “மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்." 'அவ்வளவு நாள் ஆகுமா? அப்படியானால் தமிழெல்லாம் மறந்து போகுமே!’ என்று கவலைப்பட்டார் பாவேந்தர். 'இல்லை அய்யா! அங்கே தமிழர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழில் தான் பேசுவேன்.' 'இருந்தாலும் (நீ கவிஞன். அங்கு தொழில் ஈடுபாட்டில் இலக்கியம் மறந்து போகுமே!’