பக்கம்:தேடி வந்த குயில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்குகளில் பாரதிதாசன் பொன்னி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கோவையில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த முத்தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருந் தேன், மாநாட்டில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் கவியரங்கம் ஒன்று நடக்கும் என்றும், அதில் இளங்கவிஞர்கள் பங்கேற்கலாம் என்றும் சிறந்த கவிதைக்கு ரூ 25|பரிசு வழங்கப் படும் என்றும், அந்தப் பரிசும், புரட்சிக் கவிஞர் தேர்ந் தெடுக்கும் கவிஞருக்குப் புரட்சிக் கவிஞர் கையாலேயே கொடுக்கப்படும் என்றும் அண்ணா அறிவித்தார். அந்தக் கவியரங்கத்தில் அன்றைய இளங்கவிஞர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் முடியரசன் கவிஞர் வாணிதாசன் கவிஞர் சிவப்பிரகாசம் மற்றும் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன். அண்ணா அறிவித்ததைத் தொடர்ந்து நாங்கள் கவிதை எழுதுவதில் முனைந்தோம், அனைவரும் மாநாட்டுப்