பக்கம்:தேடி வந்த குயில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தேடிவந்த குயில்


பந்தலிலேயே கவிதைகளை உருவாக்கினோம், புரட்சிக்கவிஞர் தலைமையில் அரங்கேற்றினோம். நான் அழகு மங்கை என்ற தலைப்பில் கவிதை எழுதிப் படித்தேன். கவிஞர்கள் அனைவரும் படித்து முடித்தபின், புரட்சிக் கவிஞர் பிற்பகல் மாநாட்டில் பரிசுக்குரிய கவிதை எதுவென்று அறிவிப்பதாகக் கூறிவிட்டார், உணவு வேளையின் போது மாநாட்டுக்கு வந்திருந்த இயக்க முன்னணித் தலைவர்கள் பலர் என்னைக் கண்டு, பாராட்டினார்கள். அறிஞர் அண்ணாவும் என்னைக் கண்டு பாராட்டி, புரட்சிக் கவிஞர் எனக்குத்தான் பரிசு வழங்குவார் என்று நம்புவதாகக் கூறினார்: நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பிற்பகல் மாநாடு தொடங்கியது. புரட்சிக் கவிஞர் வந்து மேடையில் அமர்ந்தார். பரிசுக் குரிய கவிதையை அறிவித்து, எழுதிய கவிஞருக்குப் பரிசு வழங்கும்படி அண்ணா கேட்டுக் கொண்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுந்து, ஒலிபெருக்கி அருகில் வந்து சிறந்த கவிஞராக வாணிதாசன் அவர்களை அறிவித்து, மேடைக்கு அழைத்துப் பரிசு வழங்கினார். எனக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது, அறிஞர் அண்ணா உட்பட பல தலைவர்கள் பாராட்டியும் புரட்சிக் கவிஞர் பாராட்டுப் பெற முடியாமல் போயிற்றே என்று வாடிப்போனேன். - மாநாடு முடிந்து மேடையைவிட்டு இறங்கி வந்த புரட்சிக் கவிஞர் என் வாட்டத்தைக் கவனித்துவிட்டார். என் அருகில் வந்தார்,