பக்கம்:தேடி வந்த குயில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்குகளில் பாரதிதாசன்

51


"முதலில் உன் கவிதைக்குத்தான் பரிசு கொடுக்க நினைத்தேன். ஆனால், ஆழ்ந்து நோக்கியபோது உன் கவிதை என் கவிதை போலவே இருந்தது. பிறர் என்ன நினைப் பார்கள். நானே எழுதிக் கொடுத்து, உன்னைப் படிக்கச் சொல்லி, உனக்குப் பரிசு கொடுத்ததாக எண்ணலாம் அல்லவா? அதனால்தான் உனக்குப் பரிசு கொடுப்பதைத் தவிர்த்தேன். உன்னுடைய நடையை மாற்றிக்கொள்” என்று கூறினார். பாரதிதாசனைப்போலவே எழுதாமல் இருக்கப் பிறகு பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, எனக்கென்று ஒரு தனி நடையை ஏற்படுத்திக் கொண்டேன். கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டுக் கவியரங்கில் புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் தலைமையில் நான் அரங்கேற்றிய பாட்டு. அழகு மங்கை வாள்சுற்றிப் போர்செய்யும் பகைக்கஞ் சாத வன்னெஞ்சப் போரேற்றின் தினவெ டுத்த தோள்சுற்றும் வேகத்தில் துடிது டித்துத் தோன்றியதோர் அழகுதனைக் கண்டேன்! அந்த வாள் மின்னும் மின்னலிலும் கார்மே கம்போல் வரும்யானைக் கூட்டத்தும், பவழம் போலத் தூள்தூளாய்க் கதிரொளியில் மின்னும் ரத்தத் தோய்வினிலும் சிரித்தவள்தான் தோன்றக் கண்டேன்! வையத்தில் இருக்கின்ற பொருளி லெல்லாம் வானத்தில் ஒளிர்கின்ற மீனில் எல்லாம் தையலர்கள் மீனக்கண் ஒளியிலெல்லாம் தானாகத் தோன்றியவள் கவிதை தந்து,