பக்கம்:தேடி வந்த குயில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தேடிவந்த குயில்


செய்யதிருப் பாக்களிலே நடம்பு ரிந்து சிறுகுழந்தை புன்னகையில் மின்ன லாகிப் பெய்திருக்கும் மழைநீரில் ஓடி வந்து பெருமகிழ்வால் சிரித்தபடி பேசு கின்றாள் செந்நெல்லின் பச்சையிலே சேர்ந்து கொண்டாள் சேற்றுக்குள் தாமரையாய் வளர்ந்து நின்றாள் புன்னகையின் ஒளிதன்னைப் போர்த்துக் கொண்டாள் பூரித்து நிற்கின்றாள் மாம்பழத்தில்! அன்னத்தில் வெண்மைநிற மாகத் தோன்றி அதுவைத்த தளிர்வாழை தன்னிற் சேர்ந்து சின்னக்கொவ் வைக்கனியில் சிவந்து தோன்றிச் செம்பவழத் தன்னிலவள் சிரிக்க லானாள்! காலையிலே கடல்மீது தோன்று கின்ற கதிரவனின் செவ்வொளியில் மிதந்து வந்தாள் சாலையிலே நடுப்பகலில் மரத்தின் கீழே சரிந்திருக்கும் நீழலிலே ஒட்டிக் கொண்டாள்! மாலையிலே வானத்தின் செங் களத்தில் வழிந்திருந்த குருதியிலே மின்னித் தோன்றிச் சோலையில்ே நிலவுதந்து பாலை அள்ளித் தெளித்தவுடன் சிரித்துவிட்டாள் அழகு மங்கை! வானத்து மீன்களிலே கண் சிமிட்டி வருகவென அழைக்கின்றாள். அணுகும் போது கானத்துத் தளிர்மேனி தழுவத் தந்து காதலினை வளர்க்கின்றான்! முல்லைப் பூவில் நீமுத்தம் தாவென்று நெட்டு யிர்த்து நெடுநாளாய் எதிர்பார்த்த செல்வத் தோடு சீனத்துக் கப்பல்வரும் கடல்து ரையில் சிரிக்கின்றாள்; எக்களித்துக் குதிக்கின் றாளே!