பக்கம்:தேடி வந்த குயில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்குகளில் பாரதிதாசன்

53


தூரத்துப் பச்சையிலே காட்சி தந்தாள்! துள்ளிவரும் மான்முதுகில் புள்ளி யானாள்! பூரித்துத் தோன்றுகிறாள் காலிக் கூட்டம் புற்றரையில் மேய்கின்ற போது நெஞ்சம் ஆரத் தழுவுகின்றாள் தென்ற லாகி அலையடித்து நுரையெழுப்பிப் பாயும் ஆற்றின் ஒரத்துக் கரைகளிலே மலர்ந்தி ருக்கும் ஒளிவண்ணப் பூக்களிலே சிரிக்கின் றாளே! -நாரா நாச்சியப்பன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு நூலின் முதற் பாட்டு. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள். ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்! சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள். நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே! செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்! விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்;என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!