பக்கம்:தேடி வந்த குயில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தேடிவந்த குயில்


திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன்நல் லின்பங் கண்டேன் பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண்! நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை! -பாரதிதாசன் குறிப்பு: இந்த இரு பாடல்களிலும் பாடு பொருள் ஒன்றே! பாடும் முறையும் ஒன்றே பாட்டுநடையும் ஒன்றே! ஆனால் கற்பனையும் கவிச்சிறப்யும் தமிழ் ஆளுமையும் தனித்தனிச் சிறப்பு வாய்ந்தவை என்பதை இரண்டையும் ஒப்புநோக்கு வார் நன்கு அறியலாம். 事 寧 事 மீண்டும் ஒரு முறை கோவையிலே புரட்சிக் கவிஞர் தலைமையில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. கல்கி அவர்கள் பெரு முயற்சி எடுத்து பாரதியாருக்கு மணிமண்டபம் ஒன்று எட்டயபுரத்தில் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். பாரதியார் மணிமண்டபத் திறப்பு விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை அழைக்கவில்லை. பாரதியாரோடு நெருங்கிப் பழகிய பலரை அழைக்க வில்லை பாரதியார் குடும்பத்தினரையே அழைக்கவில்லை. எனவே, அவர் அழைக்காத பாரதி அன்பர்களை யெல்லாம் அழைத்து அதே நாளில் கோவையில் பாரதிவிழா ஒன்று நடத்தினார் தொழில் மேதை ஜி. டி, நாயுடு,