பக்கம்:தேடி வந்த குயில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தேடிவந்த குயில்


சட்டைக்கு மேல்பழைய கோட்டு மற்றும் சரிகையின்றித் தலைமேலே சேரன்போலே கட்டிவைத்த தலைப்பாகை இதுதான் அந்தக் கவியரசன் பாரதியின் தோற்றம் கண்டீர்! நீருக்குள் விளக்கெரியும் விந்தை யான - நிகழ்ச்சிதனைக் கதைக்கின்ற புலவன் அல்லன் பாருக்குள் தான்பிறந்த நாட்டில் உள்ளார் படுந்துயரம் தனைக்கண்டான்; வளமி ருந்தும் சீருக்கும் கிறப்புக்கும் இடமில் லாத திருநாட்டின் அடிமைநிலை கண்டான், யாண்டும் வீரக்கும் மாளமிட்டுத் தன்தாய் நாட்டார் விளங்கும்நாள் தனைக்கொணர முயன்ற வீரன்! கலிங்கத்தை வென்றாராம்; கண்ண கிக்குக் கல்சுமக்க வைத்தாராம், இமய மீது புலிபொறித்து வந்தாராம் புகழ்கொண் டாராம் புலவரெல்லாம் கதைக்கின்றார். அணுவு மின்று வலிவில்லை தாய்நாட்டின் மக்க ளென்போர் வாலறுத்த குரங்குகளாய் மாற்றான் ஆட்சி வலைப்பட்டுச் சிதையும்நிலை கண்டான். இந்த வாழ்வுநிலை மாறாதோ என நினைத்தான். கரும்புவிளை தோட்டத்தில் அரும்பு போன்ற கைவிரல்கள் நோவெடுக்க வேலை செய்யும் திருநாட்டின் மாதர்நிலை கண்டு கண்ணிர் சிந்திநின்றான்; தொண்டுசெய்யும் சிப்பாய்க் கஞ்சிப் பெருமக்கள் ஒட்டமெடுத் தொளிந்து வாழும் பேடிநிலை, பேய்பூதம் பிசாசு போன்ற வெறும் எண்ணத் தோற்றத்திற் கெல்லாம் அஞ்சி வீழடிமை நிலைபோக்கத் திட்ட மிட்டான்