பக்கம்:தேடி வந்த குயில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்குகளில் பாரதிதாசன்

57


வாக்கினிலே உறுதியில்லை; செயகை தன்னில் வலிவில்லை; மாற்றானை எதிர்த்தொழிக்க ஊக்கமில்லை; ஒற்றுமையோ சற்று மில்லை. உயிரடிமை ஆய்விட்டார் எனினும் இங்கே மேற்குதனைத் தொழுபவரும் கிழக்கு நோக்கி மெய்வணக்கம் செய்பவரும் உரிமை போன தாக்குமெனத் தமக்குள்ளே தாக்கி மாய்வார் தம்மடிமை நிலைபோக்க நினைக்க மாட்டார். கவிதையினாற் செந்தமிழிற் புரட்சி சேர்த்த கவியரசன் பாரதியின் கருத்தில் இந்தச் சுவையற்ற வாழ்க்கைநிலை போக்கும் எண்ணம் தோன்றியதே! நொடிதோறும் தோன்றி யிந்தக் கவைக்குதவா வாழ்வுதனை மாற்ற உன்றன் கவிதையினைப் பயன்படுத்து; கவின்சேர் வாழ்வைப் புவியிலுன்றன் தாய்நாடும் பெற்று வாழ்ந்து புதுநலத்தைச் சுவைக்குமெனக் கூறிற் றாமே! முன்னாளில் ஒருபுலவர் கடவுள் பேரில் முழநீளம் பாட்டெழுதிக் காம எண்ணம் தன்னையங்குப் பொழிந்திருப்பார். மீண்டும் அந்தத் தனிக்கடவுள் தனைதோக்கி ஒருவர் சொல்வார் என்னேஇவ் வாழ்க்கைபெரும் மாய மென்றே இன்னொருவர் கடவுள்களின் லீலை யெல்லாம் தன்னேரில் லாதசெந் தமிழில் பாடித் தாம்பெரிய புலவரெனத் தருக்கிக் கொள்வார். ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சி தன்னை உணர்த்துகின்ற கண்ணாடி இலக்கியந் தான்! பெரும்புலவர் பலருமிதை மறந்தார், ஈசன் பெருமைகளைப் பாடுவதே தொழிலாய்க் கொண்டார் தே-4