பக்கம்:தேடி வந்த குயில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தேடிவந்த குயில்


அரும்புலவன் பாரதிதான் பிறந்த நாட்டின் அவலநிலை சித்திரித்தான் இடித்துக் காட்டித் "திருநாடே விழித்திடுக' எனும் புரட்சித் தேன்மொழியைச் செவிகுளிரப் பாய்ச்சி விட்டான்! உழக்குக்குள் கிழக்கென்ற வாறே இங்கே ஊரெல்லாம் வெள்ளையருக் கடிமை யான இழுக்கிருக்கும் போதுயர்த்த சாதி என்னும் இறுமாப்பும் நிலைத்ததுவே சிலரி டத்தில் முழக்கினார் இழிசாதி மக்கள் யாரும் முன்வரக் கூடாதென்றே!’ எதிர் முழக்கம் முழக்கினான் பாரதிதான் "இந்த நாட்டின் முடிமன்னர் யாவரும்காண்’ என்று ரைத்தே! பாரதி தன் தாய்நாட்டின் மீது வைத்த பற்றிற்கோர் எடுத்துக்காட் டுரைப்பேன் கேளீர்! சீரிய என் தமிழ்நாட்டுப் பெண்ணைத் தோற்கச் செய்யும் அழ குடையாள் இன் னொருத்தி யென்று கூறிடினும் உளம்பொறுப்ப தில்லை யென்று கூறினான் உயர்கவிஞன் அவனே யன்றோ? கூறியதும் வீறுதனை உளப்ப படுத்தும் கொள்கையினால் அன்றோசெந் தமிழ்நாட்டாரே! உரிமையினை முழுமையுற அடைய வேண்டின் உணர்வடைய வேண்டுமிந்த நாட்டு மக்கள். சரியான உணர்வுபெற வேண்டு மென்றால் சற்றேனும் மடமையச்சம் கூடா தன்றோ? புரிந்துகொண்டான் பாரதிதான் அச்சந் தானே போக்கற்ற அடிமைநிலை சேர்க்கும் என்றே! வரிந்துகட்டிக் கொண்டடிமை நிலைமே போக்க வாழ்நாளைச் செலவிட்டான் புரட்சி வேந்தன்.