பக்கம்:தேடி வந்த குயில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரங்குகளில் பாரதிதாசன்

59


வாழ்நாளின் பாரதியை இழந்து விட்டோம் வந்துவிட்டான் நம்உளமாம் மண்டபத்தில் வாழ்கின்றான்! வீரத்தை வெற்றி தன்னை வாழ்வுரிமை அத்தனையும் அடைந்த நெஞ்சில் வாழ்கின்றான் அவன் உயர்வை எண்ணி யெண்ணி மகிழ்கின்ற பெருமக்கள் உள்ளந் தன்னில்! வாழ்கின்றான்! பாரதிதான் சாக வில்லை! வாழ்கின்றான்! வாழ்கின்றான்! வாழ்க நன்றே! 米 家 韃 சீனர்கள் இந்திய எல்லையில் தங்கள் படைகளைக் குவித்தனர். அதை எதிர்த்துக் குரல் கொடுத்த நம் அரசு அவர்களை விரட்டப் படைகளை அனுப்பியது. சீனர்களின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து சென்னையில் கூட்டம் நடந்தது. சீன எதிர்ப்புக் கூட்டத்தில் பாவேந்தர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் நாகமுத்தையா கவிஞர் தமிழழகன் கவிஞர் சுரதா மற்றும் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர். பாவேந்தர் விருப்பத்தின் பேரில் நானும் ஒரு பாடல் எழுதிப் படித்தேன். சீனர் செயலைக் கண்டித்துப் பாடிய எங்களை யெல்லாம் பாவேந்தர் பாராட்டிப் பேசினார். பாவேந்தரோடு நான் மிக நெருங்கிப் பழகவும் இல்லை. நெருங்காமலே இருந்ததுமில்லை. பல நேரங்களில் அவர் என்மீது ஒரு பற்றும் மதிப்பும் வைத்திருந்தார் என்று எண்ணும் போது அவருடைய பரந்த உள்ளம் என்னை வாழ்த்தியது என்று எண்ணும் போது ஒரு மகிழ்ச்சி பூக்கிறது.