பக்கம்:தேடி வந்த குயில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பரம்பரை

61


சிலப்பதிகாரக் காட்சிகளும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைத்த காவியக் காட்சிகளும் பொன்னி அட்டைப்படங்களாசவும், மலர் அட்டைப்படங்களாகவும், வண்ணப்படங்களாகவும் நல்ல ஒவியர்களால் எழுதப்பெற்று வெளி வந்தன.

பெரியார் அண்ணா புரட்சிக் கவிஞர் ஆகியோர் உருவப் படங்கள் நல்ல கனமான ஆர்ட் அட்டைகளில் பல வண்ணப் படங்களாகப் பொங்கல் மலர்களில் வெளிவந்தன.

தமிழ்ப்பற்றுள்ள பல குடும்பங்களில் பொன்னி வெளி யிட்ட தலைவர்களின் வண்ணப் படங்கள் கண்ணாடிச் சட்டமிட்டு மாட்டி வைக்கப்பட்டன.

பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் மட்டுமல்லாது புதுத் தமிழ் உணர்வூட்டும் புரட்சிக் கட்டுரைகளும் இடம் பெற்றன.

புரட்சிக் கவிஞரைப் பெருமைப் படுத்தும் வகையில் அவரைப் பின்பற்றி எழுதும் பல சிறந்த கவிஞர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்த ஒரு புதுப் பகுதியை பொன்னியின் முதல் இதழிலேயே தொடங்கி வைத்தார் முருகு சுப்பிர மணியன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பின்பற்றி அவருடைய பாணியை மட்டுமல்லாமல், அவர் பரப்பிய தன்மானக் கருத்துக்களையும் கொண்ட இளங்கவிஞர்கள் மிகப் பலர் இருந்தார்கள். முடியரசன். வாணிதாசன், சுரதா, சிவப்பிரகாசம், கோவை இளஞ்சேரன், மு. அண்ணாமலை, நாக முத்தையா, சாமி பழனியப்பன் போன்ற பல கவிஞர்கள், புதுத் தமிழ் உணர்வுப் பாடல்களைப் படைத்து வந்தனர். இவர்களையெல்லாம் 'பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில், பொன்னியில் அறிமுகப் படுத்தினார். இவர்கள் எழுதிய சிறந்த கவிதைகளை இதழுக் கொன்றாக வரிசை யாக அறிமுகப்படுத்தியது பொன்னி,