பக்கம்:தேடி வந்த குயில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தேடிவந்த குயில்


பாரதிதாசன் பரம்பரையின் முதல் கவிஞராக அறிமுக மானவர் மு. அண்ணாமலை. இரண்டாவதாக நான். அடுத்து முடியரசன், சுரதா, வாணிதாசன், ச. சிவப்பிரகாசம், கோவை இளஞ்சேரன் குலோத்துங்கன், நாகமுத்தையா போன்ற கவிஞர்கள் அறிமுகமாயினர். 48 இளங்கவிஞர்கள் பாரதிதாச பரம்பரையாகப் பொன்னி மூலம் அறிமுகப் படுத்தப் பெற்றனர். -

முதல் இரண்டு ஆண்டுகளில் இதழ்தோறும் பாரதிதாசன் படைத்த புதிய பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வந்தது. இந்த இரண்டு ஆண்டுகளிலும், இதழ் தோறும் என்னுடைய பாடல் ஒன்றும் தொடர்ந்து இடம் பெற்று வந்தது.

பொன்னி வெளியீடாக வந்த என்னுடைய ஈரோட்டுத் தாத்தா என்ற நூலுக்கும் நான் எழுதிய 'கொய்யாக் காதல்’ என்ற சிறு காவிய நூலுக்கும் புரட்சிக் கவிஞர் தம்முடைய "குயில் இதழில் பாட்டாகவே மதிப்புரை எழுதிப் பெருமைப் படுத்தினார்.

பொன்னி நிறுவனத்தின் முத்து' என்ற சிறுவர் இதழை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். அதில் புரட்சிக் கவிஞர் தாமாகவே ஒரு தொடர் எழுத முன் வந்தார்.

திருக்குறள் கருத்துக்களை இதழுக்கொரு குறள் என்ற முறையில் சினிமாக் காட்சி போல நாடகமாக எழுதித்தர முன்வந்தார்.

'திருக்குறள் சினிமா என்ற தலைப்பில் மூன்று இதழ் களில் தொடர்ந்து எழுதினார். பிறகு முத்து வெளிவருவது தடைப்படவே, புரட்சிக் கவிஞரின் திருக்குறள் சினிமாவும் தொடரவில்லை.

திருக்குறளைப் பரப்புவதற்குப் புரட்சிக் கவிஞர் கண்ட புதுமுறை திருக்குறள் சினிமா,