பக்கம்:தேடி வந்த குயில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில் 1947ஆம் ஆண்டு. பொன்னியில் நாள் துணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பெரியண்ணன் அவர்களும், முருகு சுப்பிரமணியம் அவர்களும் இணைந்து பொன்னி இழழை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடத்திய முத்து' என்ற சிறுவர் பத்திரிக்கைக்கும் நான் ஆசிரியராக இருந்தேன். ஒருநாள் புதுக்கோட்டைக்கு வந்த பாவேந்தர் பொன்னி அலுவலகத்துக்கு வந்திருந்தார். அன்று பொன்னி ஆசிரியர் வீட்டில் பாவேந்தருக்கு விருந்து. விருந்து முடிந்து ஒய்வாக இருந்த போது, பாவேந்தர் அவர்கள் முருகு சுப்பிரமணியனைப் பார்த்து, என்னைக் காட்டி, - 'இவனைப் போல் எனக்கு உதவியாக ஒரு பையன் இருந்தால் நல்லது. யாராவது இருந்தால் அனுப்புங்கள். என் வீட்டிலேயே சோறு போட்டு வைத்துக் கொள் கிறேன்.” என்று கூறினார்.