பக்கம்:தேடி வந்த குயில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தேடிவந்த குயில்


யாரை அனுப்பலாம் என்று முருகும் பெரியண்ணனும் எண்ணிக் கொண்டிருந்த போது, அண்ணாமலை சும்மா தானே இருக்கிறான். அவனை அனுப்பலாமே!” என்று கூறினேன்.

"பொருத்தமான ஆள் தான்! நாளை அண்ணாமலை யைக் கேட்போம்” என்று சொன்னார் பெரியண்ணன்.

மறுநாள் அண்ணாமலை பொன்னி அலுவலகத்துக்கு வந்தபோது முருகு கேட்டவுடன், அண்ணாமலைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

கவிஞர் மு. அண்ணாமலை அப்போது இருபது வயது இளைஞர். என் வகுப்புத் தோழராயிருந்தவர். இளமை யிலேயே வறுமைக்கு ஆட்பட்டவர். இண்டர்மீடியட்வகுப்பு வர்ை படித்து விட்டு மேலும் படிக்க வசதியில்லாமல் வேண்ல தேடிக் கொண்டிருந்தார்.

இரண்டு வாரங் கழித்து புரட்சிக் கவிஞருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அண்ணாமலையைப் புதுவைக்கு அனுப்பி வைத்தார் முருகு.

சில நாட்கள் கழித்து, ஒரு மாநாட்டில் சந்தித்தபோது, "அண்ணாமலை மிக உதவியாக இருக்கிறான், கவிதை நன் நாக எழுதுகிறான்” என்று புரட்சிக் கவிஞர் முருகுவிடம் கூறினார். ஆனால், இரண்டே மாதத்தில் அண்ணாமலை திரும்பி வந்து விட்டார்.

புரட்சிக் கவிஞர் வீட்டில் இல்லாதபோது சொல்லிக் கொள்ளாமல் ஓடிவந்து விட்டார். முருகு சுப்பிரமணியன் அண்ணாமலையைக் கடிந்து பேசினார். கவிஞர் வந்த பிறகு சொல்லிக் கொண்டல்லவா வந்திருக்க வேண்டும்?” என்று சினந்தார்.