பக்கம்:தேடி வந்த குயில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தேடிவந்த குயில்


"பட்டியல் எவ்வளவு போடுவதேன்று......... ' என்று நான் இழுத்தேன், "தங்கள் தயக்கத்தைப் பாவேந்தர் உணர்ந்திருக்கிறார். இதில் தாங்கள் சலுகை காட்ட மேண்டியதில்லை. முறைப் படி எவ்வளவு போடுவீர்களோ, அதைப் போடுங்கள். தாங்கள் காட்ட வேண்டிய சலுகை யெல்லாம், குயிலை உரிய நேரத்தில், பிழையில்லாமல் அச்சிட்டுத் தர வேண்டியது தான். பாவேந்தர் என்னிடம் இன்னொன்றும் கூறினார்கள். "நாச்சியப்பன் வேறொருவரிடம் வேலை பார்க்கிறான். அவனுக்கு நாம் தொல்லையாக இருக்கக் கூடாது. நம் நிலைமை எப்படியிருந்தாலும் அச்சகப் பட்டியலை உடனுக் குடன் தீர்த்துவிட வேண்டும் என்று நிலையான ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்." அன்று பொன்னடி கூறிய இந்தச் சொற்கள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன. பாவேந்தர் என்னிடம் எவ்வளவு பரிவு வைத்திருந் தார் என்பதை இக்கருத்துக்கள் உணர்த்துகின்றன. பாவேந்தர் என்னைத் தேடி வந்தும், வேலை கொடுத் தும், பொன்னடி மூலம் தொடர்பு கொண்டும்-நான் பாவேந்தர் வீட்டு க்குச் சென்று நேரில் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மாதம் கழித்து ஒருநாள் என் நண்பர் நாக முத்தையா வந்தார். 'டே, பாரதிதாசன் சென்னைக்கு வந்திருக்கிறாராம். வா. போய்ப் பார்த்து வரலாம்,' என்று ஆவலோடு அழைத் தார்.