பக்கம்:தேடி வந்த குயில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில்

69


'பாரதிதாசன் இங்கேயே வந்திருந்தார்' என்று கூறி, குயில் அச்சிடும் செய்தியைச் சொன்னவுடன் நாகமுத்தையா மகிழ்ச்சியடைந்தார், தனக்கு முன்னதாகவே இந்தச் செய்தியைத் தெரிவிக்காததற்குக் கடிந்து கொண்டார். 'சரி சரி புறப்படு. இன்றே போய்ப் பார்த்து வருவோம்' என்றார். பணியாட்களுக்கு வேலை விவரம் கூறி ஒழுங்கு செய்த பின், நாக முத்தையாவுடன் பாவேந்தரைப் பார்க்கப் புறப் பட்டேன். தியாகராய நகரில் பாவேந்தர் தங்கியிருக்கும் வீட்டை யடைந்தோம். பாவேந்தர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். நாக முத்தையாவை அறிமுகப்படுத்தினேன். "பொன்னடி!' என்று பாவேந்தர் அழைத்தார். பொன்னடி தேநீருடன் வந்தார். தேநீர் வழங்கியவுடன் உள்ளே சென்று விட்டார். 'பொன்னடி எனக்கு மிக உதவியாக இருக்கிறார். என் குறிப்பறிந்து வேலை செய்கிறார், கவிதை கூட நன்றாக எழுதுகிறார்" என்று பாவேந்தர் கூறினார். தன்னிடம் பணிபுரிபவர் கவிஞராகவும் இருப்பது குறித்துப் பாவேந்தர் அடைந்த மகிழ்ச்சியை உணர முடிந்தது. 1947-ல் அண்ணாமலை பாவேந்தரிடம் பணி புரிந்த போது ‘அண்ணாமலை நன்றாகக் கவிதை எழுது கிறான்” என்று பாவேந்தர் கூறி மகிழ்ந்தது என் நினைவுக்கு வந்தது, - ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (L i C) ஒர் அதிகாரியாக வேலை பார்த்த கவிஞர் நாக முத்தையா பாவேந்தரிடம் நெருங்கிப் பழகினார். அடிக்கடி பாவேந்தர் வீட்டுக்குச் சென்று வந்தார்.