பக்கம்:தேடி வந்த குயில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தேடிவந்த குயில்


பல நிலைகளில் பாவேந்தர் நாக முத்தையாவுடன் கலந்து பேசி முடிவெடுக்கும் அளவுக்கு அவர் ஓர் அந்தரங்கத் தோழரும் ஆகிவிட்டார். நாகமுத்தையா பாவேந்தருக்குப் பல வகைகளில் உதவியும் இருந்தார். இடையிடையே பாவேந்தரைப் பார்க்கப் போகும்போது என்னையும் கூட அழைத்துச் செல்வார். ஒருநாள் நாக முத்தையாவுக் கென்று சிறப்பு விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்தார் பாவேந்தர். ஒருமுறை பாவேந்தர் கன்னடர் எதிர்ப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். பெங்களுரில் நடந்த திருமதி எம். எஸ். சுப்புலெட்சுமியின் இசை நிகழ்ச்சியில் புகுந்து கன்னடர்கள் கலவரம் விளைவித்ததைக் கண்டித்து இம்மாநாடு நடை பெற்றது, தமிழிசைக்குக் கன்னடர் எதிர்ப்பா? அதைக் கண்டிக்க வேண்டும் என்று பாவேந்தர் உணர்ச்சி வசப்பட் டார். இந்தக் கன்னட எதிர்ப்பு மாநாடு வாணிமகாலில் நடைபெற்றது. அதில் பல கவிஞர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பாவேந்தரின் உணர்வில் கலந்த நானும் மேடையேறிப் பேசினேன். பொன்னடி வீராவேசமாகப் பேசினார். அன்று பாவேந்தர் பேசிய உரையில் தமிழ் இன உணர்வு பளிச்சிட்டது. தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று பொங்கும் உணர்வுடன் பேசினார். தன்னைப் பின்பற்றிக் கவிதைகள் படைக்கும் நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஒன்றுபடுத்த எண்ணினார் பாவேந்தர். ஒன்றுபட்டால் உயர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில், தமிழ்க் கவிஞர் மன்றம் ஒன்று தொடங்க எண்ணினார், தமிழ்க் கவிஞர் மன்றம் தொடங்குவதற்கு கவிஞர் நாக முத்தையாவும், பொன்னடியானும் பாடுபட்டு உழைத் தார்கள். தலைசிறந்த கவிஞர் பெருமக்களுக்கு அழைப்பு