பக்கம்:தேடி வந்த குயில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடிவந்த குயில்

71


அனுப்பப்பட்டது. பொன்னடியும் நாக முத்தையாவும் நேரில் சென்று பலரை அழைத்தனர். அமைப்புக் கூட்டம் பாவேந்தர் இல்லத்தில் (இராமன் தெரு, தியாகராய நகர்) 26-1-1962அன்று நடைபெற்றது. அமைப்புக் கூட்டத்தில் பாவேந்தர் தமிழ்க் கவிஞர் மன்றம் ஏன் தேவை என்பது பற்றி விளக்கி ஒரு சொற் பொழிவு நிகழ்த்தினார். அப்பொழுது கவிஞன் யார் என்ப தற்குச் சில விளக்கங்களைக் கூறினார். ஒரு கவிஞன் இசைப்புலவனாகவும் இருந்தால்தான் உண்மையான கவிஞன் ஆவான் என்று கூறினார் பாவேந்தர். பாவேந்தர் நல்ல இசைப்புலமை உள்ளவர். தம் பாடல் களை அவரே நல்ல இசையில் பாடுவார். அவர் பேசும் போதுதான் குரல் கடுமையாக ஒலிக்கும். பாடும்போது மிக மென்மையாக இழைந்து கொடுக்கும். இதைக் கண்டு நான் பல முறை வியந்திருக்கிறேன். எனவே அவர் கூறிய இலக்கணத்திற்கு அவர் முற்றும் பொருந்தியிருந்தார். நான் எழுந்து நின்றேன். அவர் பேசும்போது குறுக் கிட்டுப் பேசினேன். "அப்படியானால் நான் உண்மையான கவிஞன் இல்லையா?" என்று கேட்டேன். "யார் அப்படிச் சொன்னார்?' என்று கேட்டார். 'நீங்கள்தான்! இசைப்புலமை இல்லாதவன் உண்மை யான கவிஞன் இல்லை யென்று சொன்னீர்களே! எனக்கு இசைப் புலமை கிடையாது. அப்படியானால் நான் கவிஞன் அல்ல என்றுதானே ஆகிறது?’’ பாவேந்தர் என்னை உற்று நோக்கினார். "நான் பொதுப்படையாகத்தான் இலக்கணம் கூறினேன். ஆனா லும் நீ கவிஞன்தான்!” என்று கூறினார்,