பக்கம்:தேடி வந்த குயில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தேடிவந்த குயில்


இப்படிப் பலர் பலமுறை புரட்சிக் கவிஞரைக் கேட்ட இந்த வரிகள் இன்னும் பலரால் அவர் எழுதியனவாகவே சுருதப்படுகின்றன. தமிழைப் பாடுகின்ற போதெல்லாம் புரட்சிக் கவிஞர் தாமே தமிழ் வடிவமாக மாறிவிடுவார் என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்திதான்! தமிழே நீ ஒரு படைவீடு நான் அங்கோர் மறவன் என்பார் நீ ஒரு பூக்காடு நான் ஒரு தும்பி என்பார் தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் என்பார். - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே! என்றும் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! என்றும் வீரம் பேசுவார். இனிமைத் தமிழ் மொழி எமது எமக்கின்பம் தரும்படி வாய்த்த நல்அமுது என்று தமிழோடு ஒன்றிக் கலந்துவிடுவார். சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்-என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் இறக்கும் போது கூடத் தமிழ் படித்துக் கொண்டே இறக்க வேண்டும் என்றும், எரித்த பிறகு மிஞ்சும் சாம்பல் கூடத் தமிழ் மணத்தோடு விளங்கவேண்டும் என்றும் புரட்சிக் கவிஞர் பாடியிருக்கக் கூடும் என்று நம்புவதில் தவறில்லை தானே!