பக்கம்:தேடி வந்த குயில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதாத வரிகள்

77


இந்த வரிகள் புரட்சிக் கவிஞர் பாடியவை யல்ல. ஆனால் இவை அவர் பாடியதாகப் பலரால், தங்கள் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலுத் எடுத்தாளப் படுகின்றன, எந்நாளோ என்ற தலைப்பில் புரட்சிக் கவிஞர், தமிழர் கள் இமயமலை போல் உயர்ந்து விளங்கும் நாளை எண்ணிக் கனவு காண்கின்றார். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரம் கொள் கூட்டம் அன்னாள் உள்ள்த்தால் ஒருவரேமற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங் கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாள் உள்ளம் சொக்கும் நாள் எந்நாளோ? என்றும் நொறுக்கினார் முதுகெலும்பைத் தமிழர்கள் என்ற சேதி குறித்த சொல் கேட்டின் பத்தில் குதிக்கும்நாள் எந்நாளோ என்றும், இன்னும் பலப்பலவாறு தமிழர் உயர்வு குறித்துப் பாடியிருக்கிறார் புரட்சிப் பாவேந்தர். கடவுள் வெறி சமயவெறி . கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே! என்று மதவெறியைக் காண்டித்தும் பாடியிருக்கிறார் , இப்படிப்பட்ட புரட்சியாளர். சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எங்காளோ? என்று குமுறியிருப்பார் என்று எண்ணுவதில் தவறில்லை தானே!