பக்கம்:தேன்பாகு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


அப்போது கோபாலன், "நான் ஆடு அல்லடா!” என்றான். அதைக் கேட்டவர்கள் இது ஏதோ பேயோ பிசாசோ என்று அஞ்சி ஓடி விட்டார்கள். பிறகு விடியற்காலை வேளையில் கோபாலன் ஆற்றுக்குச் சென்று நீராடி வீட்டை அடைந்தான்.

"நீ விடியற்காலையில் நீராடப் போகையில் சொல்லி விட்டுப் போகக் கூடாதா? கதவு திறந்திதிருந்ததனால் யாரோ உள்ளே புகுந்து தேன் பாகையெல்லாம் வீணாக்கி விட்டார்கள்” என்று அந்த வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.

“அப்படியா?, நான் நீராடப் போக வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டேன்” என்று அவன் சமாதானம் சொன்னான். ஆனாலும் அவ்வளவு தேன்பாகும் வீணாகி விட்டதே என்று அவனுக்கும் சற்று மனத்தில் வருத்தம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/10&oldid=1301360" இருந்து மீள்விக்கப்பட்டது