பக்கம்:தேன்பாகு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


விஷயம் தெரியாதென்று நினைத்து விட்டானோ! குமரன் எண்ணம் ஓடியது. கோபம் கனன்றது.

"என்ன ஐயா! ஒரே புளுகாகப் புளுகுகிறீரே! காய் விளைந்து விட்டதென்று ஏன் பொய் சொல்லுகிறீர்?" என்று படபடப்போடு கேட்டான் சின்ன எஜமானன்.

"விளைந்து விட்டது என்பது பொய்யா? இதோ அடுத்த வாரத்தில் வெட்டப் போகிறோம்!"

"என்ன ஐயா! முழு மோசமாக இருக்கிறது. செடியில் ஒரு காயைக்கூடக் கானோம். நீர் அளக்கிறீரே!"

காரியஸ்தருக்கு உண்மை விளங்கியது அழுவதா, சிரிப்பதா என்று அவருக்கு யோசனை வந்துவிட்டது. "எஜமான் செடியைப் புரட்டிப் பார்த்ததற்குக்காரணம் இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. கடலைக்காய், செடியின் மேல் இருக்காது; வேரிலேதான் இருக்கும். அதனால் வேர்கடலை என்று இதைச் சொல்வார்கள். இதோ பாருங்கள்" என்று விளக்கிக் கொண்டே காரியஸ்தர் ஒருகொடியைப் பிடுங்கிக் காட்டினார். வேரில் கொத்துக் கொத்தாய்க் கடலைக்காய்கள் இருந்தன. தன்னைக் காரியஸ்தர் ஏமாற்ற வில்லை, கடலைச் செடிதான் ஏமாற்றி விட்ட தென்பதை, சீமைப் படிப்பில் தேர்ச்சி பெற்ற செல்வன் அப்போது தெளிந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/14&oldid=1261011" இலிருந்து மீள்விக்கப்பட்டது